About Me

My photo
A Fun loving guy who lives life for the present

Tuesday, 20 August 2024

காதல் வலி

புரிந்து வழ்வாய் என நினைத்தேனே, பிரிந்து ஏன் சென்றாயடி?

வலி இருப்பின் - வழி கொடுத்தேன்
அன்பு இருப்பின் - அதை மறைத்தேன் 


நீங்காத உன் நினைவில், 

தூங்காத என் இமை


காணாத உன் உருவம்,
கனமானது என் இதயம்


போகும் இடமெல்லாம்,
கண் தேடியது உனைதானே


உன் சாபம் பலித்ததடி,
என் நெஞ்சம் துடித்ததடி


நீ வருவாய் மீண்டும்,
நம்பியது என் மனம்

காதலில் மரணம் கடந்துவிட முடியும்!
காதலில் பிரிவு கடப்பது கடினம்!
காதல் என்றும் அருமையோ அருமை!
காதலில் பிரிவு கொடுமையோ கொடுமை!


கைகோர்த்து வாழ்வது மட்டுமே காதலா?
விலகி நின்று வாழ விடுவதும் வாழ்த்துவதும் காதலே!

Tuesday, 23 July 2024

அப்பா

நீரே எமக்கு உயிர் கொடுத்தவர்,

நீரே எம்மை உருவாக்கியவர்,

நீரே எம்மை உயர்த்தியவர்,

நீரே எம்மை உயர பறக்க செய்தவர்.


உமக்காக வாழாமல் எமக்காக வாழ்ந்தவரே,
பொதுசனத்தின் உள்ளம் கவர்ந்தவரே,
உமது ஆசை தான் என்ன, யாம் அறியேன்!
நிறைவேற்றாத கடனாளியானேன், எம் மனதில் அது நீங்கா குறையே!

வாழ்வாய் என்று நினைத்திருந்தேன்,
சென்றாய் எமை பிரிந்து,
சொர்க்கத்தில் இடம் வென்று போனாயோ?
உன் பிரிவை நெஞ்சம் ஏற்க மறுக்கிறது.

என்றும் வாழ்வாய் எம் மனதில், கடவுளாய்
.

Friday, 8 March 2019

மகளிர்

எமக்கு உலகம் தந்ததும் உருவம் தந்ததும் நீ (தாய்)
எமக்கு உணர்வு தந்ததும் உயர்வு தந்ததும் நீ (தாரம்)
எமக்கு இம்சை அழித்து இனிமை தந்தது நீ (தங்கை)
எம்மை தட்டிக் கொடுத்து தாங்கி நின்றது நீ (தோழி)
பெண்ணே நீ கொண்டது பல உருவம் 
பெண்ணே உன்னால் சுழலுது இந்த உலகம்

மகளிர் தின வாழ்த்துகள்!!

Wednesday, 20 February 2019

பிரிவினை

மதம் ஒரு பிரிவினைவாதம் என்றால்,
சாதி ஒரு பிரிவினைவாதம் என்றால்,
மொழி ஒரு பிரிவினைவாதமே!!
சாதி, மதம், மொழி அனைத்தையும் நம் அடையாளமாக மட்டுமே காண வேண்டும், ஆணவமாக அல்ல!!

Wednesday, 13 February 2019

Life


Personal life is as important as the professional life, professional life is as important as the personal life.
Balancing is the key!
hashtahashtag

Wednesday, 8 March 2017

மகளிர் தினம்


நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய் தெய்வமெனில், எருமை மாடு போல் வளர்ந்த பின்னும் நம்மை பேனுகின்ற தாரம் தெய்வத்தின் தெய்வம் அல்லவோ!


மங்கையர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்! 

Thursday, 12 March 2015